காதல்...
இன்று புன்னகையோடு வரும்,
நாளை கண்ணீர் சிந்தவைத்து ஓடிவிடும்
என்றே நினைத்தேன்.
காதல்...
சீச்சீ, கெட்ட வார்த்தை
அது எனக்கெல்லாம் ஒத்து வராது
என்றே கர்வமாக இருந்தேன்.
காதல்...
அப்படி என்றால் என்ன?
நானாவது, காதலிப்பதாவது
என்று எகத்தாளமாகப் பேசினேன்.
காதல்...
வேண்டாமடா இந்த தொல்லை என்று
ஆண் வர்க்கத்தை விட்டே விலகியேயிருந்தேன்.
ஆனால் அந்தக் காதல் என்னையும் ஒருநாள் தீண்டியது..
சண்டைக்கோழியாய் சீறச் சென்ற நான்
அவளைப் பார்த்து சாந்தமானேன்.
ஏன் அப்படி அடங்கினேன்..?
முதலில் தெரியவில்லை அந்த உணர்வுக்கு பெயர் என்னவென்று?
அவள் சொல்லித்தான் தெரிந்தது...
அது தான் காதல் என்று.
கடைசியில் வென்றது காதல்தான்...
காதலை வெறுத்த நானும்
இன்று காதலில்...