Facebook Page

.

Sana cute Images




நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு



ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண் 

கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் 

பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்.. என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் 

கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் 

பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் 

பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்.”

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே 


கொண்டுவந்து விட்டாள்.

பாதிரியார் பெருமையுடன், என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார் 

என்றார்.

அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி 


வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, “அழகிய அசுரா.. அழகிய 

அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?” என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் 


பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் 

பலிச்சுடுச்சு” என்றது உற்சாகத்துடன்..!!!!

சாவே வேண்டாம்


ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே 

வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்”

 அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு 

கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு 

போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். 

வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு 

என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம


“குப்புமி”

“குப்புமி”

“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்…

சாமியின் background voice .. "வரம் கேக்குற உனக்கே இத்தன அடப்புனா 

குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்... "

 

மனிதர்கள்


நெற்றியில் பட்டை இட்டால் ஹிந்து.

கழுத்தில் சிலுவை அணிந்தால் கிறிஸ்துவன்.

தலையில் குல்லா அணிந்தால் இஸ்லாமியன்.

ஒருவனே கடவுள் என்றால் பக்திமான்.

கடவுள்களே இல்லையென்றால் நாத்திகன்.

இப்படி அடையாளங்களோடு வாழும் மனிதர்களே..!!

எதனை இட்டுக் கொண்டால்

அல்லது

அணிந்து கொண்டால்,

நாங்கள் "மனிதர்கள்" என்று அழைக்கப்படுவோம்..?

காதல்...!





ஒரு ஆண் தனது இரண்டாவது தாயையும்...




ஒரு பெண் தனது முதல் குழந்தையும்...





- தேடுவதே காதல்...!

போர்க்களமா வாழ்க்கை?


போர்க்களமா வாழ்க்கை?

பார்க்கலாமே ஒரு கை!
சோர்ந்து விடாதே!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!




இல்லையென்பார்,
இருப்பதைக் கொடுப்பாய்
இன்னமும் என்பார்
இதுதான் முடியும் என்பாய்!
 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates