ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண்
கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல்
பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?
ஃபாதர் சொன்னார்.. என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும்
கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப்
பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம்
பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்.”
அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே
கொண்டுவந்து விட்டாள்.
பாதிரியார் பெருமையுடன், என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்
என்றார்.
அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி
வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, “அழகிய அசுரா.. அழகிய
அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?” என பாடின.
தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப்
பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல்
பலிச்சுடுச்சு” என்றது உற்சாகத்துடன்..!!!!