Facebook Page

.

தமிழா.. ஒரு நிமிடம் ....




தமிழா ......!
நீ
தமிழா ....?

குட் மார்னிங் முதல் குட் நைட் வரை
தமிழ் மேல் உனக்கு
ஏன் இந்த கொலை வெறி .....

உன் இயல்பான வாழ்க்கையில்
தமிழும் இற(ரு)ந்து வருகிறது .....

உன் வாழ்க்கை தரம் உயர்ந்ததும்
உன் தாயையும் தாய் மொழியையும்
கைவிடுகிறாய்....
மீண்டும் உன்னை ஏற்றுகொள்ள
உன் தாய் யோசிக்கலாம் ...
தாய் மொழி யோசிக்காது... !

இயற்கையை விரட்டியடித்து விடலாம்
என்று நினைக்கிறாய் ....
அதன் சீற்றத்தை உன்னால் தாங்க முடியாது...!
இயற்கையும் தமிழும் ஒன்று தான்...

உலகம் போற்றும் தமிழை ஏன்
உன் உள்ளம் போற்ற வில்லை ...!
நீ போற்ற வேண்டாம்..
உன் தலைமுறையிலும் நடை முறையிலும்
தமிழை ஊட்டு...

தடுமாற்றமான வாழ்கையில்
"தமிழா" நீ
தமிழன் தான் என்பதை மறந்து விடாதே..!

காதல் கீதாசாரம்...





யாரை நீ காதலித்தாயோ...
அவள் வேறொருவனைக் காதலித்தாள்...
யாரை நீ காதலிக்கின்றாயோ...
அவள் வேறொருவனைக் காதலிக்கின்றாள்...
யாரை நீ காதலிக்கப் போகின்றாயோ...
அவளும் வேறொருவனையே காதலிப்பாள்...

2012 உலகம் அழியுமா? பாகம்-4



மாயன்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தமாகபதின்மூன்று கிறிஸ்டல் மண்டையோடுகள் இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் கிடைத்தன. பதின்மூன்று மண்டைகள் ஏன் என்பதற்கான விளக்கத்தையும் ஆராய்ந்தவர்கள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டனர்.அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர், உங்களை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு நடந்த சம்பவங்களை விளக்கிவிட்டு, மீண்டும் மண்டையோட்டுக்கு வருகிறேன்.
இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள்,பகுத்தறிவுவாதி அல்லாதவர்கள் என்னும் இரண்டு வகையாகப் பிரிந்தேவாழ்கிறார்கள். இங்கு பகுத்தறிவு என்று நான் சொல்வது நாத்திகத்தை அல்ல. பலர் பகுத்தறிவையும், நாத்திகத்தையும் ஒன்றாக்கித் தமக்குள் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். பகுத்தறிவின் ஒரு அங்கமாகத்தான் நாத்திகம் இருக்கிறது. ஒரு பகுத்தறிவுவாதி, நாத்திகராக இருப்பார்.ஆனால் ஒரு நாத்திகர் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பையும் தாண்டி,பல மூடநம்பிக்கைகளையும் மறுக்கிறது.

100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா: பொக்கிஷமாக கிடைத்த படங்கள்!



100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும்? உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்படங்களைக் கொடுத்தால்….எப்படி துள்ளுவீர்கள்?
இந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது! ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு ஷூ பெட்டியை எதேச்சையாக திறந்திருக்கிறார்கள்..
அதில் கட்டுக்கட்டாக கிளாஸ் பிளேட் நெகட்டிவ்கள்.. பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்தக் காலத்து இந்தியா…
 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates