Facebook Page

.

100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா: பொக்கிஷமாக கிடைத்த படங்கள்!



100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும்? உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்படங்களைக் கொடுத்தால்….எப்படி துள்ளுவீர்கள்?
இந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது! ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு ஷூ பெட்டியை எதேச்சையாக திறந்திருக்கிறார்கள்..
அதில் கட்டுக்கட்டாக கிளாஸ் பிளேட் நெகட்டிவ்கள்.. பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்தக் காலத்து இந்தியா…


பெரும்பகுதி புகைப்படங்கள் கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்டவை.. சென்னை புகைப்படங்களும் கூட இதில் அடக்கம்! அனேகமாக இந்த புகைப்படங்கள் 1912-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ், ராணி மேரி ஆகியோர் கொல்கத்தா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களும் இருக்கின்றன. அவர்கள் கொல்கத்தாவுக்கு வந்தது 1912தான்!
எடின்பரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது இந்த அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
எடின்பரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது இந்த அரிய புகைப்படங்கள்  வைக்கப்பட்டிருக்கின்றன.







































 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates