Facebook Page

.

2012 உலகம் அழியுமா? பாகம் - 5


கடந்த பதிவில் மாயனின் கணித அறிவைப் பற்றி விளக்கமாகச் சொல்லவேண்டும் என்பதற்காக, அவர்களின் கணிதத்தை அதிகமாக விளக்கியது,பலருக்குப் புரிந்திருக்கலாம், சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருந்தது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. எமக்குப் புரிய வேண்டியது, மாயன்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பது மட்டும்தான்.

அமெரிக்கா என்று சொல்லப்படும் மிகப் பெரி நிலப்பரப்பு, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று மூன்று பகுதிகளாகப்பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமெரிக்காவில் மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரீகா, கொண்டுராஸ், பனாமா, நிக்கரகூவா, பெலிசே, ஹைட்டி, கியூபா போன்ற நாடுகள் இருக்கின்றன. 'உலக அழிவுப்புகழ்' மாயன்கள் வாழ்ந்து வந்த இடமும் இந்த மத்திய அமெரிக்கநாடுகளில்தான். குறிப்பாக மெக்சிக்கோவிற்கு தென்கிழக்குப் பகுதியில்ஆரம்பித்து, ஏறத்தாழ மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் (350000) சதுர கி.மீபரப்பளவுள்ள நிலப்பரப்பில் மாயன்கள் வாழ்ந்து வந்தார்கள்.




மாயனின்வரலாறு கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகியிருக்கிறது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் கி.மு.2000முதல் கி.பி.900 ஆண்டுகள் வரை உள்ள காலப் பகுதிகளில்தான் மாயன்களின் நாகரீகம் உச்சத்தை அடைந்திருந்தது. இந்தக் காலகட்டங்களில், உலகின் பல நாடுகளில், பல இனங்களுக்கிடையே மதங்கள் தோன்றியிருந்தன.அப்படித் தோன்றிய மதங்களும், அதனைக் கடைப்பிடித்த இனங்களும், நாம்வாழும் பூமிதான் பிரதானமானது என்று நினைத்திருந்தார்கள். பூமியை மையமாக வைத்தே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன என்றும் நம்பி வந்தார்கள்.



கடவுள் முதலில் பூமியை உருவாக்கினார். அதன் பின்னர் பூமி இருட்டாக இருக்கிறது என்று கருதி, சூரியனையும், சந்திரனையும் படைத்தார் என்று பைபிள், குரான், யூதமதம் ஆகிய மூன்று பிரதான மதங்களும் சொல்கின்றன. இந்து மதத்தின் உபவேதங்களில் ஒன்றான, 'ஜோதிசம்' எனச் சொல்லப்படும் சோதிடத்தில், பூமியை மையமாக வைத்து நவக்கிரகங்கள் சுற்றுகின்றன என்ற அடிப்படையிலேயே கணிப்புகள் யாவும் இருந்திருக்கிறது.

அஸ்ட்ராலாஜி (Astrology), அஸ்ட்ரானாமி (Astronomy) என்னும் இரண்டு ஆங்கிலச் சொற்களை நாம் அடிக்கடி பாவித்தாலும், இவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த இரண்டுமே சொல்வதால், இவற்றை அனேகர் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் அஸ்ட்ரானாமி என்பது விஞ்ஞானம், அஸ்ட்ராலாஜி என்பது சாத்திரம். அதாவது ஒன்று வானவியல் மற்றது வானசாத்திரம்.




மாயன் காலங்களில் உலகில் உள்ள பல இனத்தவர்கள், வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளைக் கவனித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் 'வான சாத்திரம்' என்னும்நிலையில்தான் அவற்றைக் கவனித்திருக்கிறார்கள். மாயன்களோ அவற்றை'வானவியல்' என்னும்அறிவியல் சிந்தனையுடன் வானத்தை ஆராய்ந்திருக்கிறார்கள். இதுவேஇன்று அவர்கள் வசம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.மாயன்கள் மிகத் துல்லியமாக சூரியன், பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி,வியாழன் போன்ற கோள்களின் அசைவுகளைக் கவனித்திருக்கிறார்கள்,கணித்திருக்கிறார்கள்.

மாயன்களின் வானியல் கணிப்பை உலகுக்கு உரத்துச் சொல்லும்வரலாற்றுப் பதிவொன்று இன்றும் மாயன்கள் வாழ்ந்த இடமொன்றில் நிமிர்ந்து நிற்கிறது. மெக்சிக்கோ நாட்டில் உள்ள யூகட்டான் (Yucatan)மாநிலத்தில், மாயன்களால் கட்டப்பட்ட 'ஷிசேன் இட்ஷா' (Chichen Itza)என்னும் பிரமிட்தான் அது. 'பிரமிட்' (Pyramid) என்றதும் எகிப்தின் பிரமிட்கள்தான் உங்களுக்கு ஞாபகம் வரும். "மாயன்களிடமும் பிரமிட் இருந்ததா?" என்று நீங்கள் பிரமிக்கலாம். 'உலகின் விந்தைகளும்,மர்மங்களும் கடைசியில் ஒரு புள்ளியில் ஒடுங்கிவிடும்' என்று நான் ஆரம்பத்தில் சொன்னது போல, எல்லாவற்றிற்கும் இடை யில் ஏதோ தொடர்புகள் இருக்கலாம். அவற்றை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னர் ஷிசேன் இட்ஷா பற்றிப் பார்க்கலாம்.



வானியலை மாயன்கள் எந்த அளவுக்குப் புரிந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இந்தப் பிரமிட்டை அவர்கள் கட்டியிருக்கிறார்கள். நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரமிட்டில், வரிசையாக ஒவ்வொரு பக்கமும் படிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு பக்கங்களும்நான்கு பருவ காலங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா 91படிகள் இருக்கின்றன. மொத்தமாக நான்கு பக்கங்களும் சேர்த்து 364 படிகள்.ஆனால், வருடத்திற்கு 365 நாட்கள் அல்லவா இருக்கிறது. அதை எப்படிநான்காகப் பிரிப்பது? ஒரு படி மிஞ்சுமல்லவா? என்ன செய்தார்கள்மாயன்கள்? கடைசியாக உச்சத்தில் ஒரு மேடையை ஒரே படியாக, சதுரமாகக்கட்டிவிட்டார்கள். மொத்தமாக 365 படிகள் வந்துவிட்டது. ஒரு வருடத்தின் நாட்களை பிரமிட்டாகவே மாயன்கள் கட்டியிருப்பது,ஆராய்ச்சியாளர்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


பூமி, சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கிறது என்பதை மாயன்கள் எப்படிக் கணித்தார்கள்? இந்தத் துல்லியமான வானவியல் கணிப்பு முறையை எப்படி அறிந்துகொண்டார்கள்? நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை இயங்கும் விதத்தைஎப்படி அவதானித்தார்கள்? என்னும் கேள்விக்கெல்லாம் பதில் மாயன்கள் வாழ்ந்த இடத்திலேயே எமக்குக் கிடைத்தது. அதை அறிவதற்கு முன்னர்இந்தப் படங்களைப் பாருங்கள்.




இவையெல்லாம், நாம் தற்போது வானத்தில் உள்ளவற்றை ஆராயஉபயோகிக்கும் சில வானவியல் அவதான நிலையங்கள் (Observatory Dome).வேறு வேறு இடங்களில் இருப்பவை.

என்ன பார்த்துவிட்டீர்களா……….?

இப்போ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாயன்களால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும் அவதானிக்கக் கட்டப்பட்ட கட்டடத்தைப் பாருங்கள். யார் யாரிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள்?இப்படி ஒரு ஒற்றுமை எப்படி நிகழலாம்? அல்லது இது ஒரு இயல்பான கட்டட வடிவமைப்பா….? எல்லாமே தற்செயல்தானா...? சரி, அதை நீங்களே பாருங்கள்!



வானத்தை ஆராய்வதற்கென்று தனியாக அவதானிப்பு நிலையம் ஒன்றைமாயன்கள் அந்தக் காலத்திலேயே கட்டியிருக்கிறார்கள். அப்ப்டிக்கட்டியிருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல, அது நவீன காலத்து அவதானிப்புநிலையத்துடன் பொருந்தும்படி கட்டப்பட்டிருப்பதுதான் வியப்பை அளிக்கிறது.

ஒரு மனிதன், தன்னையும் தான்சார்ந்த சமூகத்தையும்திடமாக நிலைப்படுத்தி அமர்ந்து கொள்வதற்கு, தனக்கென ஒரு கலாச்சாரநாற்காலியைத் தயார்படுத்துகிறான். அந்தக் கலாச்சார நாற்காலியை இனம்,மொழி, மதம், நாடு என்ற நான்கு கால்களுடன் அவன் அமைத்துக்கொள்கிறான். உலக நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு இனமும், தனக்கென ஒருதனித்துவத்தையும், அடையாளத்தையும் காத்து வைத்திருக்கவேவிரும்புகின்றது. அப்படி அவர்கள் விரும்பும் அடையாளத்தில்,அவர்களுக்கென உருவாக்கிய நாட்காட்டிகளும் (காலண்டர்)அடங்குகின்றன. இந்த அடிப்படையில், உலக மக்களிடையே பலநாட்காட்டிகள் வழக்கத்தில் உண்டு. வெவ்வேறு நாட்காட்டிகள் இருப்பது குழப்பத்தை உருவாக்கியதால், பின்னாட்களில் அனைவருக்கும் பொதுவாக இருக்கட்டும் என ஒரு நாட்காட்டியைக் கொண்டு வந்தனர். அப்படிதற்காலப் பாவனைக்கு நாம் வைத்திருக்கும் நாட்காட்டி, கிரிகோரியன்நாட்காட்டி (Gregorian Calendar) எனப்படுகிறது. கிரிகோரியன் என்பவர்வத்திக்கானில் பாப்பாக இருந்தவர்.


கிரிகோரியன் நாட்காட்டி, தை மாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரை 365நாட்களையும், நான்காவது வருடம் 'லீப் வருடம்' என்னும் பெயரில் 366நாட்களையும் கொண்டிருக்கும். இது போலவே மாயன்களும் தமக்கென தனியாக நாட்காட்டியைக் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள்தமக்கென ஒரு நாட்காட்டியை அல்ல, மூன்று நாட்காட்டிகளை உருவாக்கிவைத்திருந்தனர். அவை மூன்றும் வெவ்வேறு அடிப்படையகளில்,வித்தியாசமாக அமைக்கப்பட்டவை.

'ஷோல்டுன்' (Choltun), 'ஷோல் அப்' (Chol’ab’), 'ஷோல் கிஜ்' (Chol Q’ij) என்னும் மூன்றும்தான் மாயன்களிடம் இருந்த நாட்காட்டிகள். இதில் 'ஷோல்டுன்'என்னும் முதல் நாட்காட்டி, சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட நாட்காட்டியாகும். இது நீண்ட 'காலக் கணக்கைக்' (Long Count) கொண்டது. இதுதான் எங்கள் உலக அழிவு பற்றி இன்று பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த நாட்காட்டி. அது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

'ஷோல் அப்' என்னும் இரண்டாவது நாட்காட்டி, எமது கிரிகோரியன்நாட்காட்டி போல, சூரியனைப் பூமி சுற்றும் சூரிய நாட்காட்டியாகும். இது365 நாட்களைக் கொண்டது. ஷோல்க் 'இஜ் என்னும் மூன்றாவது நாட்காட்டி 260 நாட்களைக் கொண்ட நாட்காட்டி.


நாம் முதலில் 'ஷோல் அப்' நாட்காட்டி பற்றிப் பார்க்கலாம். இந்தநாட்காட்டி மொத்தமாக 19 மாதங்களைக் கொண்டது. அதில் 18 மாதங்கள்,ஒவ்வொன்றும் 20 நாட்களைக் கொண்டவை. மொத்தமாக 18x 20 = 360 நாட்கள்வருகிறது. கடைசியாக வரும் 19 வது மாதம் 5 நாட்களைக் கொண்டது.மொத்தமாக 365 நாட்கள். மாயன்களின் முதல் மாதத்தின் பெயர் 'பொப்' (Pop) என்றும், கடைசி மாதம் 'வேயெப்' (Weyeb) என்றும் அழைக்கப்படுகிறது.அது போல, மாதம் தொடங்கும் முதல் நாள் 0 (பூச்சியம்) என்றும், மாதம் முடிவடையும் நாள் 19 என்றும் அழைக்கப்பட்டது. கடைசி மாதமான'வேயெப்' மாதத்தின் முதல் நாள் 0 எனவும், கடைசி நாள் 4 எனவும் குறிக்கப்படுகிறது.

மாயன்களின் புது வருடம் 'பொப் 0' (Pop 0) என்ற நாளில் ஆரம்பிக்கிறது. இது எமது தற்கால நாட்காட்டியின் சித்திரை மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் மாறிமாறி வரும். கடைசி மாதமான 'வேயெப்' மாதம், மாயன்களின் சிறப்பானமாதம் ஆகும். கடவுளுக்கென அர்ப்பனிக்கப்பட்ட 5 நாட்களைக் கொண்டமாதம் அது. கடவுளை வணங்கி கொண்டாடும் மாதமாக இது அமைகிறது.கிரிகோரியன் உருவாக்கிய நாட்காட்டியின் கடைசி ஐந்து நாட்களின் முன்னர் கிருஸ்து பிறந்தார் என்பதற்கும், அதாவது மார்கழி மாதம் 25ம்திகதி கிருஸ்து பிறந்தார் என்பதற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா என நீங்கள் நினைத்தால், அப்படி நினைப்பதற்கு நான்பொறுப்பல்ல.

மாயன்களிடம் மொத்தமாக மூன்று நாட்காட்டிகள் இருந்தன என்று கடந்த பதிவில் பார்த்தோம். மாயன்களிடம் இருந்த மூன்று நாட்காட்டிகளில், ஒன்று365 நாட்களைக் கொண்டது. இரண்டாவது 260 நாட்களைக் கொண்டது. ஆனால்இவை இரண்டுமே குறுகிய காலக் கணக்கைக் கொண்ட நாட்காட்டிகள்.மாயன்கள் மிகப் பெரிய சுற்றைக் கொண்ட ஒரு நாட்காட்டியைஉருவாக்கினார்கள். சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவைக் கொண்டு உருவாக்கபட்டது அது. அதை 'நீண்ட கால அளவு நாட்காட்டி' (Long Count Periods) என்றைழைக்கின்றனர் தற்கால ஆராய்ச்சியாளர்கள். இது ஷோல்டுன்(Choltun) என்று மாயன்களால் பெயரிடப்பட்டது.

படத்தில் காணப்படுவதுதான் மாயன்களின் 260 நாட்களைக் கொண்ட'ஷோல்க் இஜ்' (Cholq Ij) என்னும் பெயருடைய நாட்காட்டி. ஒன்றுடன் ஒன்று இணைந்த இரண்டு சக்கரங்கள் முறையே 13 பிரிவுகளையும், 20பிரிவுகளையும் கொண்டது. இந்த இரண்டு சக்கரங்களும் முழுமையாகச் சுற்றும் போது, 13X20=260 நாட்கள் முடிவடைந்திருக்கும்.

இதே போல, 365 நாட்களைக் கொண்ட, பெரிய சக்கரமுள்ள இன்னுமொரு'ஷோல் அப்' (Chol’ab’) என்னும் இரண்டாவது நாட்காட்டியும் மாயனிடம் உண்டு. ஆனால் மாயன்கள் அத்துடன் விட்டுவிடவில்லை. இந்த மூன்று சக்கரங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து முழுமையாகச் சுற்றிவரக் கூடிய இன்னுமொரு நாட்காட்டியையும் உருவாக்கினார்கள். மாயனின் அதிபுத்திசாலித்தனத்தை உலகிற்கு தெரியப்படுத்தியது 'ஷோல்டுன்' (Choltun)என்னும் இந்த நாட்காட்டிதான்.


இந்தப் படத்தில் உள்ளது போன்ற சில வட்ட வடிவமான சுற்றும் அச்சுகள்மாயன்களால் தயார் செய்யப்பட்டது. சிறிய அச்சைச் சுழற்றுவதன் மூலம்மற்றைய அச்சுகளும் சுழல்வது போல அது அமைக்கப்பட்டது. ஒவ்வொருநாள் சுழற்சியின் மூலம் அந்த அச்சுகள் ஐந்து நிலைகளைச் மாறி மாறிச்சுட்டிக் காட்டும். அப்படிச் சுட்டிக் காட்டும் ஐந்து நிலைகளும ஐந்து எண்களைகுறிக்கும். அந்த நாட்காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கும். மிகப் பெரிய அச்சு தனது ஒரு சுற்றைப் பூர்த்தியாக்கி ஆரம்ப நிலைக்கு வரும் போது, மீண்டும் 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் எடுக்கிறது.

அதாவது ஆரம்ப நாளான 0, 0, 0, 0, 0 இல் ஆரம்பித்து, இறுதி நாளான 13, 0, 0, 0, 0நாளை அடைய 5125 வருடங்கள் ஆகின்றது. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் திகதியான 0, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நவீன நாட்காட்டியின்படி, கி.மு. 3114 ஆவணி மாதம் 11ம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. அது போல,முடிவடையும் திகதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதய நவீன நாட்காட்டியின்படி, கி.பி. 2012 மார்கழி மாதம் 21ம் திகதி 11:11:11 மணிக்குமுடிவடைகிறது.

மாயன் பற்றிய பல விசயங்களை, மிகவும் விளக்கமாக சொல்லாமல், நான்மேலோட்டமாகத்தான் சொல்லி வருகிறேன். காரணம் அதை வாசிக்கும்உங்களுக்கு ஒரு அயர்ச்சியை அது தோற்றுவிக்கலாம். அதனால்,மாயன்களின் பெயர்கள், அவர்கள் பயன்படுத்திய பெயர்கள் ஆகியவற்றைதவிர்த்தே இந்தத் தொடரை எழுதி வருகிறேன். ஆனால் எல்லாவற்றையும்அப்படி விட்டுவிட்டுப் போய்விட முடியாது. சில தெளிவான விளக்கம்தான்இனி வர வேண்டியவற்றிற்கு முழுமையான அறிவைக் கொண்டு வரும்என்பதால், சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும். இப்போ, கொஞ்சம்கவனத்தை அங்கே இங்கே பாய விடாமல் கூர்மைப்படுத்தி இதைவாசியுங்கள்.


மாயன் நாட்காட்டியின் 0, 0, 0, 0, 0 ஆரம்பநாள் 0, 0, 0, 0, 0 4 Ahau என்றுதான்இருக்கும். இதில் வரும் 'ஆகவ்' (Ahau) என்பதன் அர்த்தம் கடவுள்என்பதாகும். அத்துடன், 4 Ahau என்பதில் கடவுள் பூமியை உருவாக்கினார் என்பதே மாயன் முடிவு. இதன்படி, மாயன் நாட்காட்டியின் அச்சுக்கள் சுற்றும்போது, வரிசையாக கீழே தந்தபடி 1,0,0,0,0 பின்னர் 2,0,0,0,0 பின்னர் 3,0,0,0,0 ……..இப்படி நாட்காட்டி மாறிக் கொண்டே வரும். பதின்மூன்றாவது சுற்றின் பின்னர் 13,0,0,0,0 என்பதில் நாட்காட்டி வரும் போது சரியாக 4 Ahau மீண்டும் வருகிறது. இந்த நாள்தான் 22.12.2012.

என்ன புரிகிறதா……….? சரி, புரியாவிட்டால் அப்படியே கீழே இந்த அட்டவணையைப் பாருங்கள்………!

0.0.0.0.0. 4 Ahau 8 Cumku

1.0.0.0.0. 3 Ahau 13 Ch´En

2.0.0.0.0. 2 Ahau 3 Uayeb

3.0.0.0.0. 1 Ahau 8 Yax

4.0.0.0.0. 13 Ahau 13 Pop

5.0.0.0.0. 12 Ahau 3 Zac

6.0.0.0.0. 11 Ahau 8 Uo

7.0.0.0.0. 10 Ahau 18 Sac

8.0.0.0.0. 9Ahau 3 Zip

9.0.0.0.0. 8 Ahau 13 Ceh

10.0.0.0.0. 7 Ahau 18 Zip

11.0.0.0.0. 6 Ahau 8 Mac

12.0.0.0.0. 5 Ahau 13 Zotz´

13.0.0.0.0. 4 Ahau 3 Kankin

இதுவும் புரியவில்லையா……….? பரவாயில்லை இதை அப்படியே சிறிதுவிட்டுவிட்டு, ஒரு தேனீர் அருந்திவிட்டு, இந்த அட்டவணையைக் கவனியுங்கள். மாயனின் மொழியின் படி நாட்கள், மாதங்கள், வருடங்களுக்கான பெயர்களுடன் சில விளக்கங்கள் தருகிறேன் புரிகிறதா பாருங்கள்.

1 நாள் = 1 கின் (Kin) (1x1) 1 Day

20 கின் = 1 வினால் (Winal) (20x1) 20 Days

18 வினால் = 1 டுன் (Tun) (18x1) 360 Days

20 டுன் = 1 காடுன் (Katun) (20x1) 7200 Days

20 காடுன் = 1 பக்டுன் (Baktun) 144,000 Days

13 பக்டுன்= 1 முழுச் சுற்று ( Great Cycle) (13x1) 1,872,000 Days

இங்கு 'கின்' என்பது நாளையும், 'வினால்' என்பது மாதத்தையும், 'டுன்' என்பதுவருடத்தையும் குறிக்கும் சொற்கள். 'காடுன்', 'பாக்டுன்' என்பன அதற்கும்மேலே!

1,872,000 நாட்கள் என்பது 5125 வருடங்கள்.

இப்படி 5125 வருடங்கள் எடுப்பதை, மாயன்கள் ஒரு முழுச் சுற்று என்கின்றனர்.இது போல மொத்தமாக ஐந்து முழுச் சுற்றுகள் சுற்றி முடிய, பூமி தனதுஇறுதிக் காலத்தை அடையும் என்பது மாயன்களின் கணிப்பு. அதாவதுகிட்டத்தட்ட 26000 வருடங்களில் (5x5125=25625) உலகம் இறுதிக் காலத்தைஅடையும் (Doomsday).

இதுவரை நான்கு முழுச் சுற்றுகள் முடிவடைந்து விட்டதாகவும், இப்போது ஐந்தாவது கடைசிச் சுற்று நடந்து கொண்டிருக்கிறதாகவும் மாயன்கள்சொல்லி இருக்கிறார்கள் (இது ஓரளவுக்கு இந்துக்களின் யுகங்களுக்கு பொருந்துவதாக இருக்கிறது). இதை இன்னும் ஆழமாகச் சொல்வதானால்,ஐந்தாவது சுற்றின் முதல் நாள், கி.மு. 3114ம் ஆண்டு ஆவணி மாதம் 11ம் திகதி(11.08.3114 கி.மு) அன்று ஆரம்பித்து, 5125 வருடங்கள் கழித்து 21ம் திகதி மார்கழிமாதம் 2012ம் ஆண்டு (21.12.2012) அன்று, கிட்டத்தட்ட 26000 வருசங்களைப்சுற்றிப் பூர்த்தி செய்கிறது பூமி. அதாவது, இந்த நாளே உலகம் அழியும் எனப்பலர் நம்பும் இறுதி நாளாகும்.

இதுவரை மாயன் சொல்லியவற்றைப் பார்த்தோம். இதை எல்லாம் ஒரு அறிவியல் விளக்கம் இல்லாமல் எம்மால் எப்படி நம்ப முடியும்? எங்கோ,எப்போதோ பிறந்த, யாரோ சொன்னதை நம்பி உலகம் அழியும் எனப் பயம் கொள்ள, பகுத்தறிவு அற்றவர்களா நாம்?  எனவே நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

இப்போ, நவீன வானவியல் என்ன சொல்கிறது என்று பாருங்கள்….!

சில காலங்களின் முன் 'ஹபிள்' (Hubble) என்னும் தொலை நோக்கிக் கருவியை'நாசா' (NASA) வின்வெளிக்கு அனுப்பியது. அது வான்வெளியில் ஒரு'செயற்கைக் கோள்' (Satellite) போல, பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது.அதன் மூலம் வின்வெளியை அவதானித்ததில் எங்கள் நவீன வானவியல்அறிவு பன்மடங்கு அதிகரித்தது.



இந்த 'ஹபிள்' மூலம் பலப் பல வானியல் உண்மைகளை நாம் கண்டறிந்தோம்.அப்படிக் கண்டு பிடித்த விசயங்களில் சிலவற்றை, மாயனுடன் சரிபார்த்ததில்தான், ஆராய்ச்சியாளர்களை வியப்பு ஆக்கிரமித்துக் கொண்டது.எங்கே இவர்கள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிடுமோ என்ற பயமும் கூடவே தொற்றிக் கொண்டது.

நாங்கள் இருக்கும் பால்வெளி மண்டலம் ஒரு விசிறி (Fan) போன்றஅமைப்பில் இருக்கிறது. அத்துடன் அது தட்டையான வடிவிலும் காணப்படுகிறது. அந்த விசிறி அமைப்புக்கு பல சிறகுகள் (Wings) உண்டு. அந்தசிறகுகளில் ஒன்றின் நடுவே எமது சூரியக் குடும்பம் இருக்கிறது.



பால்வெளி மண்டலம் கோடிக் கணக்கான நட்சத்திரங்களைத் தன்னுள்உள்ளடக்கி வெண்மையாக, ஒரு பாய் போல, தட்டையாகக் கிடையாகப்பரவியிருக்கிறது.


நமது  சூரியன், தனது கோள்களுடன், இந்தப் பால்வெளி மண்டலத்தில் ஒரு வட்டப் பாதையில் அசைந்து கொண்டு இருக்கிறது. அந்த அசைவு பால்வெளிமண்டலத்திற்கு செங்குத்தான திசையில் அமைந்திருக்கிறது. தயவு செய்துநான் இப்போ சொல்லி வருவதை மிக நிதானமாகக் கவனியுங்கள். இதுகொஞ்சம் வானியல் கலந்ததாக இருப்பதால், விளங்கிக் கொள்வது கடினமாகஇருக்கும். இது விளங்காத பட்சத்தில், யாரிடமாவது கேட்டுப் புரிந்து கொள்ளமுயற்சியுங்கள். .

ஒரு வீட்டின் கூரையில் மாட்டப் பட்டிருக்கும் மின்சார விசிறி (Fan) கிடையாகச்சுற்றுகிறது.  நமது  பால் வெளி மண்டலமும் அப்படித்தான் சுற்றுகிறது.ஆனால்  நமது  சூரியன், பால்வெளி மண்டலத்தில் இருந்து கொண்டே,மேசையில் இருக்கும் மின்விசிறி (Table Fan) போல, பால்வெளிமண்டலத்துக்குச் செங்குத்தாக சுற்றுகிறது. என்னால் முடிந்த அளவுக்கு இதைபடமாக வரைந்திருக்கிறேன். புரிகிறதா எனப் பாருங்கள்.





நமது பூமிக்கு நடுவாக பூமத்திய ரேகை இருப்பது போல, பால்வெளி மண்டலத்துக்கும் நீளமான, ஒரு மத்திய ரேகை உண்டு. இதை Galactic Equator என்று சொல்வார்கள்.




நமது சூரியன் தனது வட்டப் பாதையில் செங்குத்தாக சுற்றும் போது, பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் ஒரு குறித்த காலத்தின் பின்னர் சந்திக்கிறது. இனி நான் சொல்லப் போவதுதான் மிக முக்கியமானஒன்று.  நமது  சூரியன் இப்படிப் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையை (Galactic Equator) சந்திக்க எடுக்கும் காலம் என்ன தெரியுமா……..? 26,000 வருடங்கள்.

அதாவது சூரியன், பால் வெளி மண்டலத்தில் தனது நகர்வின் போது, இருந்தஇடத்திற்கு, ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் வருவதற்கு 26,000 வருடங்கள்எடுக்கிறது. 26,000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படிச் சுற்றி, மத்தியரேகையைச் சந்திக்கிறது. இம்முறை அந்த அச்சை நமது சூரியன் எப்போது சந்திக்கப் போகிறது தெரியுமா...? 2012ம் ஆண்டு மார்கழி மாதம் 21ம் திகதி.




அதாவது மாயன்களின் நாட்களிகளின் மொத்தச் சுற்றுகளுக்கு எடுக்கும்26000 வருடங்களும், பால்வெளி மண்டலத்தின் அச்சை அடையும் காலமான 21.12.2012 என்பதும் அச்சு அசலாக எப்படிப் பொருந்துகிறது?

இத்துடன் ஆச்சரியம் தீர்ந்து விடவில்லை. இன்னும் ஒரு ஆச்சரியமும் இதில்உண்டு.

சூரியன், பால்வெளி மண்டலத்தைச் சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) போன்ற இடம் இருக்கிறதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் ஈர்ப்பு விசையினால் சூரியக்குடும்பமே அதனுள் சென்று விடும் ஆபத்து உண்டு அல்லது ஏதாவது பெரிய மாற்றம் ஏற்படும் ஆபத்து உண்டு என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.



ஏதாவது ஒரு காலத்தில் இப்படிச் சூரியன் மத்திய ரேகையைத் தொடும் போது, கருப்புப் பள்ளத்தின் ஈர்ப்பு விசை அதை இழுக்கலாம். ஒரு முறை நடக்காவிட்டாலும், ஏதாவது 26,000 வருசங்களுக்கு ஒரு முறை அப்படிநடக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு கொண்டனர். இப்படி ஒரு அறிவியல் சாத்தியங்களை சொல்லிவிடக் கூடிய ஒரு இனம் இருக்குமென்றால்,  நிச்சயம் அந்த இனத்தை மதித்தே தீர வேண்டும்.




சரி......! இது மட்டும்தான் மாயனின் 26000 வருசக் கணிப்புப் பற்றிய ஆச்சரியம் என்று நீங்கள் நினைத்தால், மாயன்கள் பற்றி தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். இது மட்டும் இல்லை……!இன்னுமொன்றும் உண்டு. அது, இதைவிட ஆச்சரியமானது. மாயனையே தலையில் வைத்துக் கொள்ளலாம் போல நினைக்க வைக்கும் ஒன்று...

காத்திருங்கள் .....



 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates