நான் இந்தத் தொடரை, மாயா இனத்தவர் சொல்லியபடி, '2012 இல் உலகம்அழியுமா? இல்லையா?' என ஆராய்வதற்காகவே ஆரம்பித்தேன். ஆனால் மாயா பற்றி எதுவுமே சொல்லாமல், ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். மாயா இன மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதன் பேரில், உலகம் அழியும் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்? இந்தப் பயம்அறிவியலாளர்களிடையே கூட, இரண்டாகப் பிரிந்து விவாதிக்கும் அளவுக்குப் பெரிதாகியதன் காரணம் என்ன? அந்த அளவுக்கு இந்த மாயாக்கள் முக்கியமானவர்களா? என்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேடும்போது, உலகத்தில் நடைபெற்ற பல மர்மங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும்.
2012 உலகம் அழியுமா? பாகம் - 2
"கடந்த தொடரில் ஏதோ ஒரு படத்தைப் போட்டுவிட்டு, அந்தப் படத்துக்கும், ராக்கெட்டுக்கும் (Rocket) சம்பந்தம் இருப்பதாகச் சொல்வதை எல்லாம் நாம் எப்படி நம்புவது? சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருப்பது ஏதோ ஒரு விதமான சித்திரம் அவ்வளவுதான்" என்று நீங்கள் நினைப்பீர்கள். அதில் தவறும் இல்லை. நானும் ஆரம்பத்தில் அப்படியேதான் நினைத்தேன், மாயா மக்களை முழுமையாக அறியும் வரை.
அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட 'பிரமிட்' (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன).
Gangster Billa 2 - video song....
பில்லா 2 என்பது 2012இல் வெளிவர இருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படம்.அஜீத் குமார் நடிக்கும் இப்படத்தை சக்ரி இயக்குகிறார். ஒரு சாதாரண மனிதனான டேவிட் பில்லா என்பவர் எப்படி ஒரு பன்னாட்டுக் கொள்ளைக்காரனாக மாறினார் என்பதே இத்திரைப்படத்தின் கதை .
எந்த வீடியோ அணைத்து அஜித் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம்.......... தீப்பொறி தீபன் .............
2012 உலகம் அழியுமா? பாகம் - 1
இதோ 2012ம் ஆண்டு பிறந்து விட்டது.. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.
"சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.
Subscribe to:
Posts (Atom)